நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இதனிடையே பாஜகவைச் சேர்ந்த பெண் எம்பிக்களை பிரதமர் மோடி இன்று காலை சந்தித்து உரையாடவுள்ளார்.
பாஜக பெண் எம்.பி.க்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி! - MP meeting with PM modi
டெல்லி: நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், பாஜக பெண் எம்பிக்களோடு பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோடி
இந்தச் சந்திப்பில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள பாஜக பெண் எம்.பி.க்கள் பிரதமரிடம் பல்வேறு சிக்கல்கள் குறித்து எடுத்துரைப்பர் என்று கூறப்படுகிறது.
அப்போது மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி உள்ளிட்ட யாரும் கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.