கரோனா வைரஸ் (தீநுண்மி) நோயின் தாக்கம் காரணமாக பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். தீநுண்மி பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகளின்றி தவித்துவந்தனர். தங்களின் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்லும் அவலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரங்கேறியது.
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 'கரீப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டம்' வகுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை காணொலி வாயிலாக ஜூன் 20ஆம் தேதி அவர் தொடங்கிவைக்கவுள்ளார்.
பிகார் மாநிலம் காகரியா மாவட்டத்தில் நடைபெறும் அறிமுக நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், துணை முதலமைச்சர் சுசில் மோடி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.