தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவிட் -19 தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ள பிரதமர் மோடி! - இரண்டு உள்நாட்டு கோவிட்-19 தடுப்பூசிகள்

டெல்லி : கோவிட் -19 தடுப்பூசி போடும் திட்டத்தை ஜன.16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைப்பாரென மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோவிட் -19 தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ள பிரதமர் மோடி!
கோவிட் -19 தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ள பிரதமர் மோடி!

By

Published : Jan 14, 2021, 7:37 PM IST

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு உள்நாட்டு கோவிட்-19 தடுப்பூசிகளை நாடு முழுவதும் உள்ள மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், தடுப்பூசி போடும் முகாம் ஜன.16 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. அந்நிகழ்வை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

அத்துடன், கோ-வின் எனும் செயலியையும் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே அறிமுகப்படுத்த உள்ளார். இந்த செயலி மூலம் கரோனா தடுப்பூசி போட்டவர்களின் விவரங்கள், தடுப்பூசி பகிர்மானம், டெலிவரி ஆகியவற்றை அறிய முடியும்.

நாடு முழுவதும் உள்ள 2,934 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடக்கவிருக்கிறது. முதல்நாளில் ஒரு முகாமுக்கு 100 சுகாதாரப் பணியாளர்கள் வீதம் ஏறக்குறைய மூலம் லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், 50 வயதுக்குட்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இதற்கு தேவையான மருந்துகள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களான சீரம் மருந்து நிறுவனம், பாரத் பயோடெக் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களிடம் 1.60 கோடி டோஸ் மருந்துகளை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.

கோவிட் -19 தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ள பிரதமர் மோடி!

கரோனா தடுப்பூசி போடும் பயனாளிகளின் விவரம் கணினி மூலம் கோவிட் 19 செயலியில் பதிவு செய்யப்படுகிறது. தடுப்பூசி பயனாளிகள், அரை மணி நேரம் மருத்துவர்கள் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எந்தவொரு பக்க விளைவும் ஏற்படவில்லை என்றால், அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இதில் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட 100 மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாட உள்ளார். இந்த உரையாடலுக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப வசதிகளைச் செய்யுமாறு அந்தந்த குறிப்பிட்ட மருத்துவமனைகளை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவிட்-19 தடுப்பூசி நடைமுறைக்கு வரும் அடுத்த சில மாதங்களில் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட 30 கோடி மக்களுக்கு ஊசி போடுவதை இலக்காக வைத்து மத்திய சுகாதார அமைச்சகம் செயல்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க :பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வந்த ஜே.பி. நட்டா

ABOUT THE AUTHOR

...view details