உத்தரப்பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதியில் ராணி லட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. விவசாயம், தோட்டக்கலை, வனம் சார்ந்த துறைகளில் இளங்கலை, முதுகலைப் படிப்புகளை இப்பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.
2014-15 காலகட்டத்தில் தனது முதல் கல்வியாண்டை இப்பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. பிராந்தியத்தின் முக்கியப் பல்கலைக்கழகமான இது, தற்போது ஜான்சியில் உள்ள இந்திய புல்வெளி மற்றும் தீவன ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலையில், ராணி லட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக் கழகத்தின் புதிய கட்டடத்தை பிரதமர் மோடி இன்று(ஆகஸ்ட் 29) திறந்து வைக்கவுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராணி லட்சுமி பாய் மத்திய வேளாண் பல்கலைக் கழகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்க உள்ளேன். இது கல்வி கட்டமைப்பை மேம்படுத்தி வேளாண்துறை சார்ந்த ஆராய்ச்சியில் பெரும் பங்களிக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:வசந்தகுமாரின் சமூக செயல்பாடுகள் மதிக்கத்தக்கவை என பிரதமர் மோடி புகழ் அஞ்சலி