உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பாதுகாப்பு தொடர்பான 11ஆவது கண்காட்சி இன்று (பிப்.5) தொடங்குகிறது. இந்தக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இந்தக் கண்காட்சியில் பாதுகாப்பு அலுவலர்கள், அமைச்சர்கள், 38 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
2020 பாதுகாப்புக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார் - பாதுகாப்பு கண்காட்சி 2020
டெல்லி: லக்னோவில் பாதுகாப்புக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.
PM Modi to inaugurate Defence Expo 2020 in Lucknow today
பாதுகாப்புக் கண்காட்சியில் 1,028 நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. கடந்தாண்டு இது 702ஆக இருந்தது. அதேபோல் கடந்தாண்டு பாதுகாப்பு கண்காட்சியில் 160 வெளிநாட்டு நிறுவனங்கள் கலந்துகொண்டன. தற்போது அது 172ஆக அதிகரித்துள்ளது. இந்தப் பாதுகாப்புக் கண்காட்சியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : காங்கிரஸ் மூத்த தலைவர் மகன் பாஜகவில் இணைந்தார்!