தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அனைத்து எம்.பி.க்களுக்கும் நாளை விருந்தளிக்கிறார் பிரதமர்! - Delhi

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி புதிதாக பதவியேற்றுள்ள மக்களவை உறுப்பினர்களுக்கு நாளை விருந்தளிக்க உள்ளார்.

PM

By

Published : Jun 19, 2019, 12:31 PM IST

17ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இரண்டு நாட்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதிவி ஏற்றுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, இன்று மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட எம்.பி.க்களுக்கு நாளை (ஜூன் 20)இரவு பிரதமர் மோடி விருந்தளிக்க உள்ளார்.

இந்த நிகழ்வானது டெல்லியில் உள்ள அசோக ஹோட்டலில் நடைபெற இருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மக்களவை, மாநிலங்களவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்தார். பிரதமராக மோடி பதவியேற்ற பின், முதல் முறையாக அனைத்து எம்.பிக்களையும் நாளை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, மோடி இன்று அனைத்துக் கட்சியின் முக்கியத் தலைவர்களையும் சந்தித்து, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கை குறித்தும், இரு அவைகளின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மற்ற பிரச்னைகள் குறித்தும் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details