இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் நடைபெறும் இந்த மாநாட்டில் ஆத்மனிர்பார் பாரத் பரப்புரையில் இதுவரை பார்த்திராத வெளிவராத பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள குறிப்பில், " புத்துயிர் பெறும் : இந்தியாவும் புதிய உலகும் என்ற கருவில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் 30 நாடுகளில் இருந்து 5,000 உலகளாவிய பங்கேற்பாளர்கள் பங்கேற்கிறார்கள். மொத்தமுள்ள 75 அமர்வுகளில் 250 உலகளாவிய பேச்சாளர்களால் உரையாற்ற உள்ளனர்.
இந்த கூடல் மூலமான உலகளாவிய தொழில்துறைத் தலைவர்களை ஒன்றிணைத்து, அவர்களின் வழியே இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் மற்றும் கோவிட்-19 பாதிப்பிற்குப் பிறகான உலகளாவிய பொருளாதார மறுமலர்ச்சிக்கு சாத்தியமானவற்றை குறித்து விவாதிப்பார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வர்த்தக மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ஜி.சி. முர்மு, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜாகி வாசுதேவ், ஆன்மீகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பங்கு பெறுவர்.
இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், உள்துறை செயலாளர் பிரிதி படேல் மற்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மது நடராஜின் 'ஆத்மநிர்பார் பாரத்' நிகழ்ச்சியும், சித்தார் மேஸ்ட்ரோ ரவிசங்கரின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது மிகச் சிறந்த மூன்று மாணவர்களால் இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இந்தியா குளோபல் வீக் 2020' நிகழ்வு - பிரதமர் மோடி உரை...!
கோவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாடுகள் காரணமாக மெய்நிகர் வகையில் மூன்று நாள் உச்சிமாநாடு நடத்தப்படுத்துவது கவனிக்கத்தக்கது.