கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க பத்தாவது ஆசியான் மாநாடு நடைபெற உள்ளது. இதில், மற்ற நாடுகளுடனான உறவை வலுப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 17 ஆவது ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொள்ள உள்ளார்.
இணைப்பு வசதி, கடற்படை, வர்த்தகம், கல்வி உள்ளிட்டவற்றில் ஆசிய நாடுகளுடனான உறவை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு பிராந்தியத்தில் மிக வலுவாக உள்ளது. இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்தக் கூட்டமைப்பின் மூலம் மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்.