நிதி ஆயோக் நிர்வாகக் குழுக்கூட்டம் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் சுகாதாரம், பொருளாதாரம், தொழிலாளர் சீர்திருத்தங்கள் ஆகிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. கரோனா தடுப்பூசி விநியோக பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.
நிதி ஆயோக் நிர்வாகக் குழுக்கூட்டத்தின் தேதி அறிவிப்பு! - நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம்
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறுகிறது.
மாநில முதலமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள், மூத்த அமைச்சர்கள், மூத்த அரசு அலுவலர்கள் ஆகியோர் நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர். நிதி ஆயோக்கின் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். முன்னதாக நடைபெற்ற கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி, நிதி ஆயோக் நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. கடந்த ஆண்டு, கரோனா காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.