தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: தகவல்கள் உடனுக்குடன்...! - ராம ஜென்ம பூமி

அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர்: நேரலை செய்தி தொகுப்பு...!
அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர்: நேரலை செய்தி தொகுப்பு...!

By

Published : Aug 5, 2020, 9:12 AM IST

Updated : Aug 5, 2020, 1:56 PM IST

13:49 August 05

ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி உரை...!

இன்றைய தினம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன என ராமர் கோயில் பூமி பூஜையில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும், ஒரு கூடாரத்தில் தங்கிய எங்கள் ராம்லல்லாவுக்கு இப்போது பெரிய கோயில் எழுப்பப்படுகிறது எனக் கூறினார்.

13:29 August 05

நவீன இந்தியாவின் அடையாளம்

அயோத்தி ராமர் கோயில் இந்தியாவின் அடையாளம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில், “அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடித்தளம் அமைத்த அனைவருக்கும் வாழ்த்துகள். சட்டத்திற்கு இணங்க இது கட்டமைக்கப்பட்டிருப்பதால், இந்தியாவின் சமூக நல்லிணக்க உணர்வையும் மக்களின் வைராக்கியத்தையும் இது வரையறுக்கிறது. மேலும், ராம ராஜ்யத்தின் கொள்கைகளுக்கு ஒரு சான்றாகவும், நவீன இந்தியாவின் அடையாளமாகவும் இது இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

நிறைவு பெற்ற அடிக்கல் நாட்டு விழா

அயோத்தி ராமர் கோயிலுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய நிலையில்  விழா நிறைவுற்றது.

12:45 August 05

அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...!

அயோத்தி ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்...!

அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 

12:15 August 05

நிறைவுபெற்ற அயோத்தி அடிக்கல் நாட்டு விழா...!

அடிக்கல் நாட்டும் பூஜையில் பிரதமர்...!

அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் பூஜை தொடங்கியது. அந்தப் பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டுள்ளார்.

12:05 August 05

பாரி ஜாதம் பூஞ்செடியை நட்டு வைத்த பிரதமர் மோடி...!

அயோத்தியில் அடிக்கல் நாட்டுவதற்கு முன்னதாக பாரி ஜாதம் (பவள மல்லி) பூஞ்செடியை பிரதமர் நரேந்திர மோடி நட்டுவைத்தார்.

11:56 August 05

பாரி ஜாதம் பூஞ்செடியை நட்டு வைத்த பிரதமர் மோடி...!

ராம்லல்லாவை வணங்கிய பிரதமர் மோடி..!

குழந்தை ராமர் என்று சொல்லப்படுகின்ற ராம்லல்லாவை பிரதமர் நரேந்திர மோடி முழங்காலிட்டு வணங்கினார்.

11:48 August 05

ராம்லல்லாவை வணங்கிய பிரதமர் மோடி..!

அனுமனை தரிசிக்கும் மோடி...!

அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்வதற்கு முன்னர் ஆஞ்சனேயரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்படி பிரதமர் நரேந்திர மோடி அனுமன் கர்ஹியில் தரிசனம் செய்தார். இங்கே தன் அன்னை அஞ்சனையின் மடியில் குழந்தை அனுமன் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

11:34 August 05

அனுமனை தரிசித்த மோடி...!

அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி..!

அயோத்தி கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி வந்தடைந்தார். அவரை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.

10:49 August 05

அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி..!

அயோத்தி கோயில் வந்த யோகி...!

அயோத்தி கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அம்மாநில ஆளுநர் ஆனந்திபன் பட்டேல், பாஜக தேசிய துணை தலைவர் உமா பாரதி ஆகியோர் அயோத்தி வந்துள்ளனர்.

10:49 August 05

அயோத்தி கோயில் வந்த யோகி...!

லக்னோ வந்தடைந்தார் பிரதமர் மோடி...!

ராமர் கோயில் பூமி பூஜை விழாவிற்காக டெல்லியில் இருந்து புறப்பட்ட மோடி, லக்னோ வந்தடைந்தார். பின்னர் லக்னோவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி அயோத்தி செல்கிறார்.

10:28 August 05

அழகுற காட்சியளிக்கும் அயோத்தி ராமர்...!

அழகுற காட்சியளிக்கும் அயோத்தி ராமர்...!

ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இன்று (ஆக. 5) அடிக்கல் நாட்டவுள்ள நிலையில், அங்குள்ள ராமர் வண்ண ஆடைகள், வாசனை மலர்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டு அழகுற காட்சியளிக்கிறார்.

09:58 August 05

அயோத்தி புறப்பட்டார் பிரதமர்...!

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டார். இதில் பட்டு, வேட்டி சட்டை உடுத்தியுள்ளார். இதில் டெல்லியிலிருந்து காலை 10.35 மணிக்கு லக்னோ சென்றடைகிறார் பிரதமர். பின், லக்னோவிலிருந்து 10.40 மணிக்கு புறப்பட்டு, 11.30 மணிக்கு அயோத்தி சென்றடைகிறார்.

பிறகு, அனுமன்கரி கோயிலுக்கு 11.40 மணிக்குச் சென்று வழிபடுகிறார். 

07:33 August 05

அயோத்தியில் இன்று (ஆக.5) ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி

70 ஆண்டு காலமாக நீதிமன்றத்தில் வழக்காடப்பட்ட அயோத்தி வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு 2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி முடிவுக்கு கொண்டு வந்தது. அதன்படி, ராம ஜென்ம பூமியான அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவுள்ளது. 

அயோத்தி கடந்து வந்த பாதை...!

அதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆக.5) நாட்டுகிறார். இதனால், அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ளது. அதுமட்டுமின்றி பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ளதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் பயண திட்டம்:

அயோத்தி பூமி பூஜை: பிரதமர் மோடியின் பயண திட்டம் வெளியீடு! 

அயோத்தி பூமி பூஜையை கொண்டாடிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்...!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்க நாட்டவுள்ளநிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன்னில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஒன்றுக்கூடி கொண்டாடினர்.

பாராம்பரிய முறைப்படி பாரி ஜாதம் பூ செடியை நடவுள்ள பிரதமர் மோடி...!

அயோத்தியில் அடிக்கல் நாட்டுவதற்கு முன்னதாக சொட்டு நீர் பாசன முறைப்படி பாரி ஜாதம் பூ (பவள மல்லி) செடியை பிரதமர் நரேந்திர மோடி நடவுள்ளார்.

பாரி ஜாதம் பூ இந்துகளின் புராணங்களோடு மட்டுமல்லாது, பூஜைகளிலும் முக்கிய இடம் வகிக்கும்.

அயோத்தி ராமர் கோயில் கட்டமைப்பு எவ்வாறு இருக்கும் தெரியுமா? - உள்ளே முப்பரிமாண காணொலி!

Last Updated : Aug 5, 2020, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details