தமிழ்நாடு

tamil nadu

பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தா பயணம்!

By

Published : Jan 11, 2020, 12:00 PM IST

பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கொல்கத்தாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்.

PM Modi to arrive in Kolkata today
PM Modi to arrive in Kolkata today

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பழைமையின் சின்னமாக உள்ள பழைய நாணய கட்டடம், பெல்வெடாா் இல்லம், மெட்காஃப் இல்லம், விக்டோரியா நினைவு மண்டபம் ஆகிய 4 பாரம்பரிய கட்டடங்கள் கலாசார அமைச்சகம் சாா்பில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.

மேலும் கொல்கத்தா துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும், தற்போதைய ஊழியா்களுக்கும் ஓய்வூதிய நிதியின் பற்றாக்குறையை பூா்த்தி செய்வதற்காக மத்திய அரசு சாா்பில் இறுதி தவணையாக அளிக்கப்பட உள்ள ரூ. 501 கோடிக்கான காசோலையையும் வழங்கவுள்ளார்.

மோடியின் வருகைக்காக கொல்கத்தாவில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹவுரா பாலம் வண்ண விளக்குகளால் மிளிர்கிறது.

பிரதமா் நரேந்திர மோடி டுவீட்

இது குறித்து பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “இன்றும் நாளையும் மேற்கு வங்கத்தில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். விவேகானந்தரின் ஜெயந்தி அன்று ராமகிருஷ்ணா மடத்தில் இன்னும் சிறப்பாக உணர்கிறேன். ஆனாலும் சுவாமி ஆத்மசந்தானந்தா ஜீ அங்கு இல்லாதது ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...உபி.,யில் பேருந்து - டிரக் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details