தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா - அமெரிக்கா உறவை மேம்படுத்த முயற்சி - இந்திய அமெரிக்க உறவு

வாஷிங்டன்: இந்தியா - அமெரிக்கா உறவை மேம்படுத்தும் வகையில் வியூக ரீதியிலான கூட்டணிக்கான மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

இந்திய அமெரிக்க
இந்திய அமெரிக்க

By

Published : Sep 2, 2020, 3:13 PM IST

இந்தியா - அமெரிக்கா வியூக ரீதியிலான கூட்டணிக்கான தலைவர்களின் மாநாட்டில் (யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்) பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து யுஎஸ்ஐஎஸ்பிஎஃப் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியா - அமெரிக்கா வியூக ரீதியிலான கூட்டணிக்கான தலைவர்களின் மூன்றாம் ஆண்டு மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதை பெருமையாக கருதுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்-இன் தலைவர் முகேஷ் அகி கூறுகையில், "இந்தியா - அமெரிக்கா வியூக ரீதியிலான கூட்டணிக்கான தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதை பெருமையாக கருதுகிறோம். தற்போதுள்ள சவாலான சூழலில் இந்தியா - அமெரிக்கா உறவை மேம்படுத்த இந்த உரை முக்கிய பங்காற்றும்.

புவிசார் அரசியல், வர்த்தகம், கலாசாரம், தூதரகம், அறிவியல் உள்ளிட்டவற்றில் இரு நாடுகளும் பரஸ்பரம் சார்ந்து உள்ளன. இது ஒரு வெற்றி கூட்டணி. இந்தியா - அமெரிக்கா நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட சீனாவின் தீவிரமான செயல்பாடுகள் வாய்ப்பளித்துள்ளன" என்றார். ஒரு வார காலம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில், அமெரிக்காவின் துணை அதிபர் மைக் பென்ஸ் உரையாற்றினர். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியல் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று (செப்டம்பர் 2) நடைபெறவுள்ள கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் மகனுக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details