தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய மொபைல் மாநாடு 2020: பிரதமர் மோடி தொடங்கிவைப்பு - இந்திய மொபைல் சங்கத்தினர்

பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 08) இந்திய மொபைல் மாநாடு 2020-ஐ தொடங்கிவைக்கிறார். இந்திய மொபைல் சங்கத்தினர் சார்பில் நடைபெறும் இந்த மாநாடு வருகின்ற டிச. 10ஆம் தேதி நடைபெறும் என பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மோடி
மோடி

By

Published : Dec 8, 2020, 8:43 AM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 08) இந்திய மொபைல் மாநாடு 2020இல் தொடங்கிவைக்கிறார்.

இந்திய மொபைல் சேவை சங்கத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நான்காவது இந்திய மொபைல் மாநாடு டெல்லியில் இன்று (டிச. 08) தொடங்குகிறது. இதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக காணொலி வாயிலாக இந்த மாநாடு நடக்கவுள்ளது.

பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த மாநாட்டை தொலை தொடர்புத் துறை, இந்திய மொபைல் சேவை சங்கத்தினர் சார்பில் நடத்தப்படுகிறது. இந்த மாநாடு இன்று (டிச. 08) தொடங்கி வரும் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி காலை 10.45 மணிக்கு கலந்துகொள்வார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎம்சி 2020இன் நோக்கம் - 'ஆத்மனிர்பர் பாரத்', 'டிஜிட்டல் உள்ளடக்கம்', 'நிலையான வளர்ச்சி', தொழில்முனைவோர், கண்டுபிடிப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதாக உள்ளது. மேலும், இது வெளிநாட்டு மற்றும் உள்ளூர் முதலீடுகளை ஊக்குவிப்பதும், தொலைத்தொடர்பு மற்றும் வளர்ந்துவரும் தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் எனப் பிரதமரின் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த இஎம்சி 2020 மாநாட்டில், தொலைத்தொடர்புத் துறையின் தலைமை செயல் அலுவலர்கள், 5ஜி தொழில்நுட்ப வல்லுநர்கள், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி), தரவு பகுப்பாய்வு, கிளவுட் அண்ட் எட்ஜ் கம்ப்யூட்டிங், பிளாக்செயின், சைபர்-செக்யூரிட்டி, ஸ்மார்ட் சிட்டிஸ் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றில் தொலைத்தொடர்பு தலைமை நிர்வாக அலுவலர்கள், உலகளாவிய தலைமை நிர்வாக அலுவலர்கள், கள வல்லுநர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இதையும் படிங்க: ‘பண்பாட்டின் மீது எல்லை மீறினால் உங்களை முடித்துவிடுவோம்!’ - கறுப்பர் கூட்டத்திற்கு முதலமைச்சர் எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details