உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் நாட்டின் 11ஆவது பாதுகாப்பு கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில் 38 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்தக் கண்காட்சியில் 1028 நிறுவனங்கள் கலந்துகொண்டுள்ளன. இதில் உள்நாட்டு தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ராணுவத் தளவாட ஏற்றுமதி 5 பில்லியன் டாலராக அதிகரிக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி - பாதுகாப்பு கண்காட்சி 2020
லக்னோ: அடுத்த ஐந்து ஆண்டுகளில் ராணுவத் தளவாட ஏற்றுமதி ஐந்து பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பாதுகாப்பு கண்காட்சியைத் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி, 'ராணுவத் தளவாடங்கள் மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில் இந்தியா போன்ற பெரிய நாடுகள் மற்ற நாடுகளை நம்பியிருக்கக் கூடாது. எனவே மேக் இன் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் வாயிலாக உள்நாட்டில் தயாரிப்புகளை அதிகப்படுத்துவது முக்கியம். நாட்டில் 2014ஆம் ஆண்டு ராணுவத் தளவாட உற்பத்திக்கு 210 உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தன. தற்போது அது 460 ஆக அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டு இந்தியாவின் ராணுவத் தளவாட ஏற்றுமதி இரண்டாயிரம் கோடியாக இருந்தது. அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் அது 5 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கப்படும்' என்று கூறினார்.
இதையும் படிங்க : தெலங்கானா கும்பமேளா: களைக்கட்டும் ஆதிவாசி பண்டிகை!