இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாட்டு ராணுவத்திற்கும் அண்மையில் மோதல் வெடித்து பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், பிரதமர் இந்த திடீர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
லடாக் எல்லைப் பகுதிக்கு பிரதமர் மோடி திடீர் பயணம் - India china clash
10:05 July 03
இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் லடாக்கில் உள்ள லே எல்லைப்பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி திடீர் பயணம் மேற்கொண்டார்.
முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி நரவணே ஆகியோரும் பிரதமருடன் சென்றுள்ளனர். லே பகுதியில் உள்ள நிமு என்ற பகுதியில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ வீரர்கள், விமானப் படையினர், ஐ.டி.பி.பி (I.T.B.P.) வீரர்கள் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். மேலும், கல்வான் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்த இந்திய வீரர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது எல்லையின் நிலவரங்கள் குறித்து ராணுவ வீரர்கள் பிரதமரிடம் விளக்கமளித்தாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம் 15ஆம் தேதி (ஜூன் 15) கல்வான் பகுதியில் இந்தியாவும், சீன ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனத் தரப்பிலும் பல உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இரு தரப்பு ராணுவத் தலைமையும் தொடர் பேச்சுவார்த்தை மூலம் நிலைமைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீர், என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை