கரோனா பெருந்தொற்று பாதிப்பை இந்தியா எதிர்கொண்டிருக்கும் இதே வேளையில், சீனா எல்லைப் பகுதியில் சீண்டல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இது குறித்து ஈ டிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் பேசியபெஹ்ராம்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான அதிர் ரஞ்சன் சௌத்திரி, ”கடந்த ஒரு மாதமாகவே இந்திய - சீன எல்லைப் பகுதியான லடாக்கில் முக்கிய நகர்வுகள் நடைபெற்று வருகின்றன. சீனாவின் அத்துமீறல் குறித்து பாதுகாப்புத் துறை சார்ந்த நிபுணர்கள் அரசை தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர்.
இந்த சூழலின் உண்மைத் தன்மையை முறைப்படி மக்களுக்கு விளக்க வேண்டியது அரசின் கடமையாகும். பல்வேறு விவகாரங்கள் குறித்து மக்களிடம் உரையாடும் பிரதமர் நரேந்திர மோடி, இது போன்ற முக்கிய விவகாரம் குறித்து மௌனம் காப்பது மிகவும் வேதனைக்குரியது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் ஒளிவுமறைவு இன்றி உண்மையைத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
அதிர் ரஞ்சன் சௌத்ரியின் முழு பேட்டி குடிபெயர் தொழிலாளர்கள் விவகாரம் குறித்து பேசுகையில் ”தொழிலாளர்கள் விவகாரத்தை கையாளுவதில் மத்திய அரசு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு 2.5 கோடி பயணிகளைக் கொண்டு செல்லும் திறன் பெற்றது. இத்தகைய பலம் வாய்ந்த அமைப்பைக் கொண்டுள்ள அரசின் முறையற்ற திட்டமிடல் காரணமாகவே தொழிலாளர்கள் பெரும் வேதனையைச் சந்தித்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:இந்தியர்களின் டிஎன்ஏ-வில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது: ராகுல் காந்தி