கலை, கல்வி, புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்துவிளங்கும் 18 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ‘பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார்’ விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். இந்த விருது வழங்குவது 1996ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகளை ராஷ்டிரிய பவனில் வைத்து குடியரசுத் தலைவர் 49 குழந்தைகளுக்கு ஜனவரி 22ஆம் தேதி வழங்கினார். இந்நிலையில், நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி, விருதுபெற்ற குழந்தைகள் மத்தியில் உரையாடினார். அந்த உரையில் சாதித்த குழந்தைகளைப் பாராட்டி பிரதமர் பேசினார்.