இந்த ஆய்வில் உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் மற்றும் மாநிலத்தின் மூத்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
கேதார்நாத் அணை வளர்ச்சி திட்டம் குறித்த ஆய்வு! - கேதார்நாத் அணை வளர்ச்சி மற்றும் புனரமைப்பு திட்டம்
டெல்லி: கேதார்நாத் அணை வளர்ச்சி மற்றும் புனரமைப்பு திட்டம் குறித்து உத்தரகாண்ட் மாநில அரசுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.
கேதர்நாத், பத்ரிநாத் போன்ற புனித தலங்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை மாநில அரசு சிறந்த முறையில் செய்து வடிவமைக்க வேண்டும். தொழிலாளர்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் தற்போதைய கட்டுமான பணிகளில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவில் முடிக்க முடியும். தகுந்த இடைவெளியை கருத்தில்கொண்டு தொழிலாளர்களுக்கான பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதன்மூலம் மாநிலத்தின் சுற்றுலாத் துறை மேம்படுத்த முடியும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இந்த ஆய்வில், பிரம்மா கமல் வத்திகா (தோட்டம்) மற்றும் அருங்காட்சியகத்தின் வளர்ச்சியின் நிலை தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் வாசுகி தாலுக்கு செல்லும் வழியில் யாத்ரீகர்களை வாழ்த்துவது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய கட்டடக்கலை உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.