சாசாராம்:பிரதமர் நரேந்திர மோடி பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (அக்.23) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது,“ ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை குறிப்பிடாமல், கடந்த காலத்தில் இருண்ட காலத்தின் ஆட்சி நடந்தது. ஆனால் தற்போது நிலைமை மாற்றப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
ரோத்தாஸ் மாநிலத்தை நாட்டின் சுய மரியாதை மாநிலம் என சிலர் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். இருப்பினும், மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன” என்றார்.
மேலும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை குறிப்பிட்டு, “அது சூரியன் அஸ்தமனமாகிய காலக்கட்டம், அனைத்து துறைகளும் முடங்கி கிடந்தன. ஆனால் தற்போது அப்படி இல்லை. மாநிலத்தில் மின்சாரம், சாலை வசதிகள் என வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்றார்.
பரப்புரையின் நடுவே போஸ்புரி மொழியில் பேசிய பிரதமர், “பிகாரின் சுயமரியாதை, இந்தியாவின் மரியாதை, பிகாரின் புரட்சி மற்றும் தன்னம்பிக்கை மாநிலத்தின் சிறப்பு. நீங்கள் சிறந்த அரசை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். இதனை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன” என்றார்.
எனினும், மறைந்த மத்திய அமைச்சரின் மகன் சிராக் பஸ்வான் குறித்து அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. மறைந்த மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, “அவர் ஏழைகளுக்காக உழைத்த தலைவர்” என்றார். அதேபோல் சோஷலிச தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங்கையும் நினைவுக்கூர்ந்த மோடி அவருக்கும் அஞ்சலி செலுத்தினார்.
பிரதமருக்கு பஸ்வான் மகன் நன்றி
இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து சிராக் ட்விட்டரில், “பிகார் வந்து ஒரு உண்மையான தோழராக அப்பாவுக்கு (ராம் விலாஸ் பஸ்வான்) அஞ்சலி செலுத்துகிறார். அப்பாவின் கடைசி மூச்சு உள்ள வரை இருவரும் நண்பர்களாக இருந்தார்கள். பிரதமருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிகாரின் ஜெகன்மோகன் ரெட்டியாக உருவெடுக்கிறாரா தேஜஸ்வி யாதவ்?