முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
அதில், சுஷ்மா ஸ்வராஜ் பொதுசேவைக்காக வாழ்க்கையை அர்பணித்த ஒரு பெண் தலைவர் என்றும், தற்போது அவரை இந்தியா இழந்து தவிக்கிறது. கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு தூண்டுதலாக சுஷ்மா இருந்துள்ளார் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிறந்த பேச்சாளரான சுஷ்மா பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினராலும் போற்றப்பட்டவர். அவர் பதவி வகித்த அனைத்து அமைச்சரவையிலும் சிறப்பாக பணியாற்றியவர். குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முக்கிய காரணமாக இருந்துள்ளார். உலகின் பிற நாடுகளில் வாழும் இந்தியர்கள் இன்னல்களை சந்திக்கும் போது அவர்களுக்கு சுஷ்மா உதவியும் புரிந்துள்ளார் என மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.