கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு நேற்று மக்கள் அனைவரும் சுய ஊரடங்கை காலை ஏழு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை பின்பற்ற பிரதமர் மோடி அறிவுறுத்திருந்தார். இதுமட்டுமின்றி சரியாக 5 மணிக்கு சுகாதாரத் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கை தட்டக் கூறியிருந்தார்.
அதன்படி, பிரதமரின் தாயார் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக கை தட்டிய காணொலியை ட்விட்டரில் பிரதமர் மோடி பகிர்ந்தார். அந்தப் பதிவில், "உங்களை மாதிரி கோடிக்கணக்கான தாய்மார்களின் ஆசிர்வாதங்கள், அயராது உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர், ஊடகவியலாளர்கள் ஆகிய அனைவரையும் பெரிதும் ஈர்த்துள்ளது. இவர்கள் மேலும் பணியாற்ற உந்துசக்தியாக" உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.