போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரேபெலோ நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அக்ஸ்டா சான்டோஸ் சில்வா, வெளியுறவுத் துறை செயலாளர் யுரிகோ பிரிலன்டி டயஸ், பாதுகாப்புத் துறை செயலாளர் ஜார்ஜ் சோகுரோ சாஞ்சி ஆகியோர் அவருடன் இந்தியா வந்துள்ளனர். இதையடுத்து, அதிபர் மார்செலோ ரேபெலோ பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
இருநாட்டு உறவுகளை மேம்படுத்துமா மோடி - மார்செலோ ரேபெலோ சந்திப்பு!
டெல்லி: அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரேபெலோ பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.
Modi - Marcelo
இச்சந்திப்பின்போது, நானோ தொழில்நுட்பம், உயர் கல்வி உள்ளிட்ட துறைகள் சார்ந்த ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இருநாட்டு நலன்கள் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்தும் சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: குற்றவாளியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி