15ஆவது இந்திய-ஐரோப்பா யூனியன் உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “இந்திய-ஐரோப்பா யூனியன் நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும். அதை நாம் உடனடியாக செய்ய களத்தில் இறங்க வேண்டும். இந்திய-ஐரோப்பா யூனியன் ஒரு ‘இயற்கை பங்காளர்கள்’. இந்த பங்களிப்பு உலக அமைதிக்கும், நிலைப்புத்தன்மைக்கும் உந்துகோலாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.