தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வலிமையான இந்தியாவுக்கு அடித்தளமிட்டவர் வல்லபாய் பட்டேல் - மோடி புகழாரம் - சர்தார் வல்லபாய் பட்டேலின் 70ஆவது நினைவு தினம்

டெல்லி: வலிமையான, வளமான இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தவர் வல்லபாய் பட்டேல் எனப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மோடி
மோடி

By

Published : Dec 15, 2020, 1:08 PM IST

சுதந்திரப் போராட்ட வீரரும் நாட்டின் முதல் உள் துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் 70ஆவது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, வலிமையான, வளமான இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தவர் வல்லபாய் பட்டேல் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவுநாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்திக் கொள்கிறேன். வலிமையான, வளமான இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்தவர் வல்லபாய் பட்டேல். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றைப் பாதுகாக்க அவர் வகுத்த பாதை எப்போதும் நம்மை ஊக்குவிக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு சமஸ்தானங்களை இந்தியாவுடன் ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை மேற்கொண்டதிலும் தேவைப்படும்பட்சத்தில் ராணுவத்தினரைப் பயன்படுத்தியதிலும் அவர் ஆற்றிய பங்கு மகத்தானதாகும். துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்த வல்லபாய் பட்டேலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒற்றுமைக்கான சிலை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை!

ABOUT THE AUTHOR

...view details