இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் பட்டேல். நாட்டின் அனைத்து சுதேச மாநிலங்களையும் இணைப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்தியாவின் முதல் துணைப் பிரதமராக இருந்த பட்டேல் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி இயற்கை எய்தினார்.
இன்று அவரது 69ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வல்லபாய் பட்டேல் பற்றிய எண்ணங்களை ட்விட்டரில் பகிர்ந்தார். அதில், 'சர்தார் பட்டேல் சிறந்த மனிதர். நம் தேசத்திற்கு அவர் செய்த சிறப்பான சேவைக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.