குஜராத் மாநிலம் புல்சார் மாவட்டத்தில் 1896ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி பிறந்தவர் மொரார்ஜி தேசாய். இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத கட்சி முதல்முறையாக 1977ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. அப்போது, பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மொரார்ஜி தேசாய். 1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1979ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை பிரதமராக இருந்த தேசாயின் 124ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "மொரார்ஜி தேசாய் பிப்ரவரி 29ஆம் தேதி பிறந்ததால், நான்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் அவரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. நிதிநிலை அறிக்கையை அதிக முறை தாக்கல் செய்த அவருக்கு தலை வணங்குகிறேன். கொள்கையாலும் ஒழுக்கத்தாலுமான அவரின் அரசியலை எப்போதும் நினைவுகூருவோம்" எனப் பதிவிட்டுள்ளார்.