கரோனா வைரஸ் நோயால் இந்திய பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ளது. அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளன. சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு உதவும் வகையில் கடைசி பத்து நாள்களில் செலுத்தப்பட்டுள்ள 5,204 ரூபாய் கோடி திருப்பி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சிறு, குறு வணிகர்களுக்கு உதவி செய்ய உறுதி பூண்டுள்ளோம் - பிரதமர் மோடி - சிறு, குறு வணிகர்களுக்கு உதவி செய்ய உறுதி பூண்டுள்ளோம்
சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு உதவும் வகையில், கடைசி பத்து நாள்களில் செலுத்தப்பட்ட 5,204 கோடி வருமான வரி திருப்பி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Modi
கரோனா வைரஸ் நோய் நாட்டை உலுக்கி வரும் நிலையில், அவர்களின் தொழில் துறை செயல்பாடுகளை மேற்கொள்ள இந்த தொகை உதவும். மேலும், 7.760 கோடி ரூபாய் திருப்பி கொடுக்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தெலங்கானாவில் ஊரடங்கு: மாநிலத்திற்கு தளர்வு அளிக்கப்படமாட்டாது? - கே.சி.ஆர்