டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெறும் நிலையில் விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுளது.
இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பது சந்தேகம் என பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. வரும் ஞாயிறு அன்று பிரதமர் மோடி தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும், அங்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.