தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை திறந்து வைத்த இருநாட்டு பிரதமர்கள் - இந்திய நேபாள எல்லை

இந்திய - நேபாள எல்லையில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை இருநாட்டு பிரதமர்களும் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தனர்

Inauguration of check point
Inauguration of check point

By

Published : Jan 21, 2020, 9:59 PM IST

இந்திய - நேபாள எல்லையில் அமைந்துள்ளது ஜோக்பானி-பிரத்நகர் பகுதி. நாள்தோறும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் இந்த இடத்தை கடக்கின்றன. இப்பகுதியில் புதிய சோதனைச் சாவடியை இன்று இரு நாட்டு பிரதமர்களும் திறந்துவைத்தனர்.

ஜோக்பானி-பிரத்நகர் பகுதியில் சுமார் 260 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி, நாள்தோறும் 500 சரக்கு லாரிகளை கையாளும் திறன்கொண்டது. 140 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள நாட்டின் பிரதமர் கே. பி. சர்மாவும் ஒருசேர காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தனர்.

இதேபோல கடந்த 2018ஆம் ஆண்டு ரக்ஸால்-பிர்குஞ் பகுதியில் முதல் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி திறக்கப்பட்டது. அந்த நிகழ்வில் இருநாட்டு பிரதமர்களும் பங்கேற்றிருந்தனர்.

மேலும், பிரமதர் நரேந்திர மோடியை நேபாளத்துக்கு வருமாறு அந்நாட்டு பிரதமர் சர்மா ஒளி அழைத்தார். அதற்கு மோடி, இந்த ஆண்டு நேபாளத்துக்கு வர ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரவிந்த் கெஜிர்வாலை எதிர்கொள்ள பாஜகவின் புதிய ஆயுதம்!

ABOUT THE AUTHOR

...view details