தமிழ்நாடு

tamil nadu

தாஜ் மகாலையும் விற்றுவிடுவார் மோடி - ராகுல் காந்தி

By

Published : Feb 5, 2020, 7:27 AM IST

டெல்லி : பொதுச்சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று வரும் பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் தாஜ் மகாலையும் விற்க துணிவார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

rahul gandhi, ராகுல் காந்தி
rahul gandhi

டெல்லி ஜனபுரா பகுதியில் காங்கிரஸ் பேரணியில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "பிரதமர் நரேந்திர மோடி 'மேக் இன் இந்தியா' என நல்ல திட்டத்தை அறிவித்தார். ஆனால் இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு தொற்சாலை கூட அமைக்கப்படவில்லை.

இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், ஏர் இந்தியா, ரயில்வே, ஏன் டெல்லி செங்கோட்டை என எல்லாவற்றையும் அரசு விற்று வருகிறது. கொஞ்சம் விட்டால் ஒரு நாள் தாஜ் மகாலையும் விற்றுவிடுவர்" என விமர்சித்தார்.

ஜாமிய மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகம், டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் குறித்து பேசிய ராகுல், "பிரதமர் மோடிக்கு மதம் குறித்து புரிதல் இல்லை. நம் வரலாற்றில் வெறுப்புக்கு என்றுமே இடமிருந்ததில்லை. நம் நாடு அன்பின் திருவுருவாகும். அவர்கள் (பாஜக) மதம் குறித்து பேசுகிறார்கள், ஆனால் எந்த மதமும் வன்முறையைப் போதிப்பதில்லை" என்றார்.

இதையும் படிங்க : 'குடியரசுத் தலைவரின் உரை சனாதன அரசை பாராட்டுகிறது' - மக்களவையில் மாஸ் காட்டிய திருமா!

ABOUT THE AUTHOR

...view details