நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலெர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்தார். பின்னர் இருவரும் பொருளாதாரம் குறித்து பேசினார்கள்.
இது பற்றி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், "நோபல் வெற்றியாளர் ரிச்சர்ட் தாலெரை சந்தித்தேன். அவரின் பொருளாதார படைப்புகளின் சுவாரஸ்ய அம்சங்களைத் தெரிந்துகொண்டேன்.
நட்ஜ் தியரி தொடர்பான அம்சங்கள், தூய்மை, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எவ்வாறு இந்தியாவில் மகத்தான மாற்றங்களுக்கு வழிவகுத்தன என்பதையும் நாங்கள் விவாதித்தோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காகப் பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசு தாலெருக்கு 2017ஆம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாதுகாப்புப்படை விலக்கலில் உள்நோக்கமில்லை - ஓபிஎஸ் கருத்து