டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (ஆக.13) வீடியோ கான்பரன்சிங் மூலம் "வெளிப்படையான வரிவிதிப்பு - நேர்மையாளரை கெளரவித்தல்" என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தினார். காணொலி வாயிலாக நடந்த இந்த மாநாட்டில் ரத்தன் டாடா, ஆனந்த் மஹிந்திரா மற்றும் உதய் கோட்டக் உள்ளிட்ட பல்வேறு தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பிரதமர் நரேந்திர மோ கூறுகையில், “கடந்த ஆறு ஆண்டுகளில், அனைவருக்கும் வங்கி திட்டம், பாதுகாப்பற்றவர்களைப் பாதுகாத்தல் மற்றும் கடன் உதவி ஆகியவை எங்கள் கவனமாக இருந்தன. இன்று, ஒரு புதிய பயணத்தின் தொடக்கமாகும்.
நேர்மையாக வரி செலுத்துபவர், தேசத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறார். அந்த வகையில், இந்தத் தளம் வரி செலுத்துவோரில் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளது. இது செப்டம்பர் 25 முதல் அமலுக்கு வரும்.
சமீபத்திய ஆண்டுகளில் மத்திய நேரடி வரி வாரியம் பெரிய வரி சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கடந்தாண்டு, பெருநிறுவன வரி விகிதங்கள் 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகவும், புதிய உற்பத்தி பிரிவுகளுக்கு விகிதங்கள் 15 சதவீதமாகவும் குறைக்கப்பட்டன. ஈவுத்தொகை விநியோக வரியும் ரத்து செய்யப்பட்டது.
இந்த வரி சீர்திருத்தங்கள் நேரடி வரிச் சட்டங்களை எளிமைப்படுத்துவதாக உள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையின் செயல்பாட்டில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டன.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆவண அடையாள எண் (டிஐஎன்) மூலம் உத்தியோகபூர்வ தகவல்தொடர்புகளில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதும் இதில் அடங்கும். இதேபோல், வரி செலுத்துவோருக்கு புதிய வசதிகளையும் வழங்குகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் மின்னணு கட்டணம் செலுத்தும் முறைகளை மேம்படுத்தவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வருமான வரித்துறை முன்னோக்கி செல்ல உறுதிபூண்டுள்ளது. மேலும், கோவிட் காலத்தில் வரி செலுத்துவோருக்கான இணக்கத்தை எளிதாக்குவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க:'பலனளிக்குமா மத்திய அரசின் புதிய வரி விதிப்பு முறை?'