தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ. 1 லட்சம் கோடியில் வேளாண் உள்கட்டமைப்பு நிதி - 8.5 கோடி விவசாயிகளுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய்! - விவசாயிகள் குறித்து மோடி

டெல்லி: ஒரு லட்சம் கோடி நிதியில் வேளாண் உள்கட்டமைப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 9) தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், நாட்டிலுள்ள 8.5 கோடி விவசாயிகளுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

PM Modi
PM Modi

By

Published : Aug 9, 2020, 6:50 PM IST

மத்திய வேளாண் துறையின், 'வேளாண் உள்கட்டமைப்பு நிதி' திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதி உதவித் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டில் விவசாய வசதிகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. இது நவீன குளர்சாதன வசதிகளை கொண்ட சேமிப்பு கிடங்குகளை கிராமங்களில் உருவாக்க உதவும். இது கிராமங்களில் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

இத்துடன், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியாக 17 ஆயிரம் கோடி ரூபாய் எட்டரை கோடி விவசாய குடும்பங்களின் கணக்கிற்கு மாற்றப்பட்டதில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். இந்த திட்டத்திற்கான முக்கிய குறிக்கோள்கள் தற்போது அடையப்படுகிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் இந்தத் திட்டத்தின் மூலம் 75 ஆயிரம் கோடி ரூபாய் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் 22 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இப்போது 'தற்சார்பு இந்தியா' திட்டத்திலுள்ள கேள்விகளுக்கும் பிரச்னைகளுக்கும் தீர்வுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. நாட்டிலேயே மிகப் பெரிய ஒரு சந்தையை உருவாக்க கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்ற பணி தற்போது நிறைவடைந்துள்ளது.

தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பெரிய இணைய சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. நேரடியாக விவசாய நிலத்தில் இருந்தும், அல்லது கிடங்கிலிருந்தும் ஈ-நாம் தளத்தைப் பயன்படுத்தி வர்த்தகர்களுக்கும் நிறுவனங்களுக்கும் தனது பொருள்களை விவசாயிகளால் விற்க முடியும். தற்போதுள்ள சட்டங்கள் நாட்டின் வர்த்தகர்களான முதலீட்டாளர்களை அச்சுறுத்துவதற்கு வகையில் உள்ளது. இப்போது விவசாயம் தொடர்பான வர்த்தகமும் இந்த சிக்கலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியாவில் வேளாண் உள்கட்டமைப்பு நிதி தொடங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் விவசாயிகள் தங்கள் கிராமங்களிலும் நவீன வசதிகளை பெற முடியும். இந்த திட்டம் மூலம் கிராமத்தில் உள்ள விவசாய குழுக்கள் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான கிடங்குகள், குளிர் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை கட்ட முடியும்.

'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள புகழ்பெற்ற தயாரிப்புகளை உலகின் அனைத்து சந்தைகளுக்கும் எடுத்துச் செல்ல ஒரு பெரிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்போது கிராமங்களில் இருந்து விவசாய பொருள்கள் நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல, பிற தயாரிப்பு பொருள்கள் நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இதுதான் 'தற்சார்பு இந்தியா' திட்டத்தின் அடிநாதமாகும். இதை முழுவீச்சில் நிறைவேற்றவே நாம் பணியாற்ற வேண்டும். இதுவரை, சுமார் 350 விவசாய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளன. இவை உணவு பதப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு, IOT, ஸ்மார்ட் விவசாய உபகரணங்கள் உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை.

தற்போது சிறு விவசாயிகள்தான் பெரும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். தற்போது மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் அவர்களை காக்கும். இரண்டு நாள்களுக்கு முன்பு, நாட்டின் சிறு விவசாயிகளை உள்ளடக்கிய ஒரு மிகப் பெரிய திட்டம் தொடங்கப்பட்டது, இது வரும் காலத்தில் நாட்டிற்கும் பெரும் பயனளிக்கும்.

இப்போது சிறு விவசாயிகள் நாட்டின் பெரிய நகரங்களை அடையும்போது, புதிய முறையில் காய்கறிகளை வளர்ப்பது, கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்தை ஊக்குவிப்பது உள்ளட்டவை குறித்து அவர்களால் அறிந்துகொள்ள முடிகிறது. இது குறைந்த நிலத்திலிருந்து அதிக வருமானத்தை பெறும் பல புதிய வாய்ப்புகள் நமது விவசாயிகளுக்கு வழங்குகிறது.

21ஆம் நூற்றாண்டில் நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தின் படத்தையும் இது முற்றிலும் மாற்றும், விவசாயத்தின் வருமானமும் பன்மடங்கு அதிகரிக்கும். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும் எதிர்காலத்தில் கிராமத்தில் விரிவான வேலைவாய்ப்பை உருவாக்கப் போகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருள்களை அரசும் கொள்முதல் செய்துள்ளது. இதன் காரணமாக சுமார் 27 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக விவசாயிகளுக்கு சென்றுள்ளது. இதுபோன்ற நெருக்கடியான காலத்திலும் கிரமப்புற பொருளாராதம் வலுவாக இருக்க இதுவே காரணம்" என்றார்.

இதையும் படிங்க: கேரளா நிலச்சரிவு: உயிரிழப்பு 28ஆக உயர்வு; அதில் 17 பேர் தமிழர்கள்!

ABOUT THE AUTHOR

...view details