பாஜக நிறுவன தலைவர்களுள் முதன்மையானவரும், மறைந்த பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாயின் 95ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அவரது பிறந்த நாளை பாஜகவினர் நல்லாட்சி நாளாக அறிவித்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, அடல் பூஜல் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் நிலத்தடி நீரை திறம்பட கையாண்டு நிர்வகிக்க உதவிகரமாக இருக்கும். விழாவில் பேசிய நரேந்திர மோடி, நிறுவனங்கள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நீரை குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும்.
நிலத்தடி நீரை திறம்பட நிர்வகிக்க அடல் பூஜல் திட்டம் தொடக்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 கோடி வீடுகளுக்கு பைப் லைன் வழியாக தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க: நாடு சந்திக்கும் சுகாதாரத் துறை பிரச்னைகள்.!