2019 ஜூலை 22ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இதுவரை யாரும் சென்றிடாத நிலவின் தென்துருவ பகுதிக்குச் செல்கிறது. இத்திட்டத்தின் மைல்கல் நிகழ்வாக சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நள்ளிரவு 1:40 மணியளவில் தரையிறங்க உள்ளது. இந்நிகழ்வை நேரலையில் பார்ப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தற்போது பெங்களூரு வந்துள்ளார்.
சந்திரயான்-2 தரையிறங்குவதைக் காண பெங்களூரில் தரையிறங்கினார் மோடி
பெங்களூரு: நிலவின் தென்துருவப்பகுதியில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்குவதைக் காண பெங்களூரு சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
Modi
இதையடுத்து, பெங்களூரில் உள்ளஇஸ்ரோ மையத்திற்கு செல்லும் அவர், அங்குள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து சந்திரயான் விண்கலத்தின் தரையிறக்கத்தை பார்க்க உள்ளார்.
இதற்கிடையே, சந்திரயான்-2 தரையிறங்கும் நிகழ்வை கண்காணிக்க இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தயார் நிலையில் உள்ளனர். மேலும், பெங்களூரு வந்துள்ள மோடியை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா, பிரஹலாத் ஜோஷி ஆகியோர் வரவேற்றனர்.
Last Updated : Sep 6, 2019, 11:30 PM IST