மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இந்நிலை தேர்தல் பரப்புரை நிறைவுபெற்ற நிலையில், வரும் 23ஆம் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி ஆளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாகக் கடந்த 3 மாதங்களாகத் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.
கேதார்நாத் ஆலயத்தில் மோடி வழிபாடு - uttrakhand
டேராடூன்: மக்களவைத் தேர்தல் பரப்புரை நிறைவுப் பெற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
பரப்புரை ஓய்ந்துள்ள நிலையில் பிரதமர் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் ஆலயத்திற்குச் சிறப்பு வழிபாடு மேற்கொள்ள வந்துள்ளார். காலை 8.30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலம் வந்த அவர், அங்கிருந்து சிறப்பு வாகனம் மூலம் கேதார்நாத் ஆலயம் வந்தடைந்தார். அவருடன் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திரா சிங் ராவத் உடனிருந்தார்.
சிறப்பு வழிபாடு மேற்கொண்டபின், மோடி ஆலய புனரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். அத்துடன் அங்குள்ள குகை ஒன்றில் சிறிது நேரம் தியானம் செய்தார். மோடி இரண்டு நாள் பயணமாக உத்தரகாண்ட் வந்துள்ளார். அதேபோல் பாஜக தலைவர் அமித் ஷா குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.