நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு இன்று அதிகாலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி நிர்பயா வழக்கு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “நிர்பயா வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெண்களின் கவுரவத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்வது மிக முக்கியமானது. நமது நாட்டின் நரி சக்திகள் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள்.பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும், அங்கு சமத்துவம், வாய்ப்புக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.