தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மான் கி பாத் நிகழ்ச்சிக்கு மக்களிடம் ஆலோசனை கேட்ட மோடி! - நாட்டு மக்களிடையே ஐடியா கேட்ட மோடி

டெல்லி: 68ஆவது மான் கி பாத் எனப்படும் மனத்தின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ள தலைப்பு குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி ஆலோசனை கேட்டுள்ளார்.

மோடி
மோடி

By

Published : Aug 18, 2020, 4:18 PM IST

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனத்தின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார். இதனிடையே, வரும் 30ஆம் தேதி 68ஆவது மனத்தின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், உரையாற்றவுள்ள தலைப்பு குறித்து நாட்டு மக்களிடம் மோடி ஆலோசனை கேட்டுள்ளார்.

நமோ செயலி மூலமாகவோ 1800 - 11 - 7800 என்ற எண்ணை தொடர்புகொண்டோ மக்கள் தங்களின் கருத்தைத் தெரிவிக்கலாம் என மோடி தெரிவித்துள்ளார். கடந்த 10ஆம் தேதி முதல், மக்கள் தங்களின் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.

இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெறவுள்ள மனத்தின் குரல் நிகழ்ச்சியில், நீங்கள் விரும்பும் தலைப்பில் உரையாடவுள்ளேன். 1800 - 11 - 7800 என்ற எண்ணை தொடர்புகொண்டோ நமோ செயலி மூலமாகவோ நீங்கள் உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகாக எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, 67ஆவது மனத்தின் குரல் நிகழ்ச்சியில், கார்கில் போரின் 21ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு உரையாற்றிய மோடி, நட்புணர்வோடு செயல்பட்ட இந்தியாவை பாகிஸ்தான் முதுகில் குத்தியது என வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்திய ரூபாயின் வீழ்ச்சி - நீங்கள் நினைப்பதை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்!

ABOUT THE AUTHOR

...view details