தூய்மை இந்தியா திட்டத்தின் அனுபவங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் தேசிய தூய்மை மையம் அமைக்கப்படும் என, பிரதமர் மோடி கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி அறிவித்திருந்தார். காந்தியின் சத்தியாகிரக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தேசிய தூய்மை மையம் திறக்கப்படும் எனவும் முன்னதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஜ் காட்டில் தேசிய தூய்மை மையத்தை பிரதமர் மோடி இன்று (ஆக.8) திறந்து வைத்தார். பின்னர் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.