பிரமதர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மாதம்தோறும் ஒருமுறை வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று பேசிய அவர், "இ - சிகரெட் மனித இனத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அதன் பயன்பாட்டிற்கு என் அரசு தடை விதித்துள்ளது. இ - சிகரெட் தீங்கு விளைவிக்காது என பல இளைஞர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
புகையிலைக்கு அடிமையாகும் இளைஞர்கள் அதிலிருந்து வெளிவர சிரமப்படுகிறார்கள். அதனை பயன்படுத்துவதால்தான் புற்றுநோய், சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படுகிறது. உடலில் நச்சு ஏற்படுத்தும் நிகோட்டின் புகையிலையில் இருப்பதால்தான் இளைஞர்கள் அதில் அடிமையாகின்றனர். இது, மனஅளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாததால்தான் இ - சிகரெட் பிரபலமாகியுள்ளது. எனவே, இளைஞர்கள் புகையிலை, இ - சிகரெட் ஆகியவற்றை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.