பாரதப் பிரதமராக 2014இல் இருந்து பொறுப்பு வகித்துவரும் நரேந்திர மோடி உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பல்வேறு ஒப்பந்தம் மேற்கொண்டுவருகிறார். மேலும், தன்னை சர்வதேச முக்கியத் தலைவர்களின் ஒருவராக வளர்த்துக் கொண்டார்.
அவர் வெளிநாடுகளுக்குச் சென்று அந்நாட்டுத் தலைவர்களுடன் நட்புறவை ஏற்படுத்தியதோடு இந்தியாவுக்கு வரும் அயல்நாட்டுத் தலைவர்களுடனும் தோழமையை ஏற்படுத்திக் கொண்டார்.
அந்தவகையில், இந்தியாவுக்கு வந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை தலைநகர் டெல்லியை தவிர்த்து மற்ற இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி எப்போது, எங்கெங்கு, எந்நாட்டுத் தலைவர்களை சந்தித்தார் என்பதை கீழே பட்டியலிட்டுள்ளோம்.
ஆண்டு | இடங்கள் | நாடுகள் | தலைவர்கள் |
2014 | ஆமதாபாத் | சீனா | ஜி ஜின்பிங் |
2015 | பெங்களூரு | ஜெர்மனி | ஏஞ்சலா மோர்கல் |
2015 | வாரணாசி | ஜப்பான் | ஷின்சோ அபே |
2016 | சண்டிகர் | ஃபிரான்ஸ் | ஃபிரான்கோயிஸ் ஹாலண்டே |
2017 | ஆமதாபாத் | ஜப்பான் | ஷின்சோ அபே |
2018 | ஆமதாபாத் | இஸ்ரேல் | பெஞ்சமின் நெதன்யாகு |
2018 | வாரணாசி | ஃபிரான்ஸ் | இம்மானுவேல் மேக்ரான் |
2019 | மாமல்லபுரம் | சீனா | ஜி ஜின்பிங் |
2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திர மோடி முதல் முறையாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை டெல்லிக்கு வெளியே 2014ஆம் ஆண்டு குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் சந்தித்தார். இருவரும் காந்திஜியின் ஆசிரமத்தில் சிறிது நேரம் உரையாடினார்கள். தொடர்ந்து சர்தார் சரோவர் அணையை சுற்றிப் பார்த்தனர்.