உச்சி மாநாடு சந்திப்பு முடக்கத்தின் மத்தியில், சார்க் யுக்திகளானது கரோனா வைரஸை எதிர்த்து போராடும் என பிரதமர் மோடி நம்புகிறார். சார்க்(SAARC) மாநாடு ஒரு ஆழமான முடக்க நிலையில் இருக்கும்போது, கரோனா வைரஸ் தொற்று, நெருக்கடி நிலையில் ஒரு வாய்ப்பை தெற்கு ஆசிய பிராந்திய குழுவிற்கு வழங்க முடியுமா? 2016இல் இஸ்லாமாபாத் சார்க் உச்சி மாநாட்டினை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருந்தபோது, யுஆர்ஐ பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைமையிலான ஒரு கூட்டுப் புறக்கணிப்பைக் கண்டது.
அப்போதிலிருந்து இலங்கை, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகள் மிக உயர்ந்த அரசியல் மட்ட உரையாடல் நிகழ்வை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நாடுகையில்; இந்தியாவானது அவ்வாறு நடத்துமளவிற்கு சூழ்நிலை உகந்ததாக இல்லை என்றும், பாகிஸ்தான், அதன் மண்ணிலிருந்து பயங்கரவாதத்தினை ஒழிக்க வேண்டும் என்பது போன்ற நிலைபாட்டினைத் தக்கவைத்துக்கொண்டது. ஆனால், இந்தியா, கோவிட்-19 தொற்றைச் சமாளிக்க வேண்டி, தீர்க்கமான முடிவுகளை மேற்கொண்டு வரும் நிலையில், உலகளாவிய பொது சுகாதார சவாலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கூட்டுப் பிராந்திய யுக்திகளை எதிர்பார்த்து இன்று பிரதமர் மோடி மீண்டும் சார்க் மீது கவனத்தைத் திருப்புகிறார்.
சார்க் நாடுகளின் தலைமையானது கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு வலுவான மூலோபாயத்தை வரையறுக்க நான் முன்மொழிகிறேன் என்றும், எங்கள் குடிமக்களை ஒரு ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க காணொலி உரையாடல் வழியாக அதற்கான வழிகளை கலந்தாலோசிக்க முடியும், ஒன்றாக நாம் உலகிற்கு ஒருமுன்மாதிரியினை வைத்து ஆரோக்கியமான ஒரு கிரகத்திற்குப் பங்களிக்கலாம் என்றும் ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டிருக்கிறார்.
வெளி விவகார அமைச்சக ஆதாரங்களின்படி, பிரதமர் ட்விட்டரில் தெரிவித்ததுபோல காணொலி காட்சி உரையாடலுக்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாலும், இந்த யோசனையானது பிராந்தியத் தலைவர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. கோவிட்-19 ஐ தோற்கடிக்க கூட்டு முயற்சி தேவையாகும். மாலத்தீவின் குடியரசுத் தலைவர் இப்ராஹிம் சோலிஹ், இந்தத் திட்டத்தை மாலத்தீவுகள் வரவேற்கிறது என்றும் அத்தகைய பிராந்திய முயற்சிகளை மாலத்தீவுகள் முழுமையாக ஆதரிக்கும் என்றும் அவரது பதிலில் எழுதியுள்ளார்.
'மேலும், திரு நரேந்திர மோடி அவர்களே, உங்களது மேலான முயற்சிகளுக்கு நன்றி, இலங்கை கலந்துரையாடலில் சேர்த்து கொள்ளவும், அவர்கள் கற்றல்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்துகொள்ளவும், பிற சார்க் உறுப்பினர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் தயாராக உள்ளது, இக்கடினமானத் தருணங்களில் நாம் நமது குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒற்றுமையாக ஒன்றிணைவோமாக' என்று இலங்கை குடியரசுத் தலைவர் கோத்தபயா ராஜபக்சே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு, ஒரு இலங்கை ஆட்சி நிபுணர் சார்க் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்கிறார். ஆனால், கொழும்புடனான சமீபத்திய அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளில், குழுவினைப் புதுப்பிக்க இந்தியா எந்த ஒரு உற்சாகத்தையும் காட்டவில்லை.
நவம்பர் 2014இல் காத்மண்டுவில் நடந்த சார்க் உச்சி மாநாட்டின்போது முன்னேறிச் செல்வதற்காகத் துணைப் பிராந்தியவாதத்தின் தேவையினை வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி வங்காள விரிகுடாவின் பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை (BIMSTEC) மேலும் முனைப்புடன் ஒரு மாற்றுப் பிராந்தியமாக முன்னிறுத்துகிறார்.
பலதுறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முனைப்பு அல்லது BIMSTEC என்பது, தாய்லாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தவிர அனைத்து சார்க் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, நேபாளம், பூட்டான் போன்ற ஏழு உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும்.