குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று தனது 71ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு இன்று காலை முதலே பல்வேறு அரசியல் தலைவலர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "எங்கள் ஆற்றல்மிக்க குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழட்டும்.
வெங்கையா நாயுடு அவரது குணம், அறிவாற்றல் ஆகியவற்றால் அரசியலுக்கு அப்பாற்பட்டும் பலரால் போற்றப்படுகிறார். அவர் மாநிலங்களவையின் தலைவராகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், "குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள். நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்த அவரது அறிவு, எளிமை ஆகியவற்றால் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி பலராலும் மதிக்கப்படும் ஒரு அனுபவமிக்க தலைவர்.