பிரெஞ்ச் புரட்சியின்போது அரசியல் கைதிகள் பாரிஸ் நகரில் உள்ள பாஸ்டில் சிறையில் அடைக்கப்பட்டனர். 1789ஆம் ஆண்டு, இச்சிறை தகர்க்கப்பட்டது. இந்நாளையே அந்நாட்டினர் தேசிய தினமாக கொண்டாடிவருகின்றனர்.
இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வியூக ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த பிரெஞ்ச் நாட்டுடனான உறவை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது நண்பர் இமானுவேல் மேக்ரானுக்கும் பிரெஞ்ச் நாட்டு மக்களுக்கும் பாஸ்டில் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வியூக ரீதியில் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக கருதப்படும் பிரெஞ்ச் நாட்டுடனான உறவை வளர்க்க உறுதி பூண்டுள்ளோம்." என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்களின் மீது பரிசோதனை!