தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிகார் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து! - நரேந்திர மோடி ட்வீட்

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM Modi wishes Nitish Kumar
PM Modi wishes Nitish Kumar

By

Published : Mar 1, 2020, 12:52 PM IST

பிகார் மாநில முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், இன்று தனது 68ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிவருகிறார். இன்று காலை முதலே நிதிஷ் குமாருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது நண்பரும் பிகார் முதலமைச்சருமான நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள். கடைக்கோடி தொண்டனாக இருந்து தலைவராக வளர்ந்த ஒருவர், பிகாரின் வளர்ச்சியில் அவரது பங்கு அளப்பறியது.

சமூகத்தை முன்னேற்றுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர். அவர் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை பெற பிரார்த்திக்கிறோம்" என்று தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி கலவரம் - கார்ட்டூன் மூலம் இதயங்களை வென்ற அமுல்!

ABOUT THE AUTHOR

...view details