ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் தொடர் தோல்வியை தழுவியது. இதனை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற தெரசா மே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில், தான் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காததால் தனது பதவியை ஜூன் 7 ஆம் தேதி ராஜினாமா செய்தவதாக தெரசா மே கண்ணீர் மல்க அறிவித்தார்.
பிரெக்ஸிட் நெருக்கடியிலும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த தெரசா மே! - electoral
டெல்லி: பிரெக்ஸிட் விவகாரத்தில் தான் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காததால் பதவி விலகுவதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே கண்ணீர் மல்க அறிவித்த நிலையில், மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற மோடிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி - பிரதமர் தெரசா மே
இதற்கிடையே, இந்தியாவில் நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற பிரதமர் மோடிக்கு, தெரசா மே வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தி, மற்ற தலைவர்களின் வாழ்த்து செய்தியிலிருந்து சற்று தனித்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. கிழக்கு ஆசியாவில் உள்ள ஜப்பான் நாட்டு பிரதமரிடம் தொடங்கிய மேற்கு நாடான அமெரிக்கா அதிபர் வரை மோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.