தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பிலிப்பைன்ஸ் மருந்து தேவைக்கு நான் கேரன்டி' - பிரதமர் மோடி - கோவிட்-19 பெருந்தொற்று

டெல்லி: கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்ள தேவையான அத்தியாவசிய மருந்துகள் பிலிப்பைன்சுக்கு தொடர்ந்து விநியோகிக்கப்படும் என அந்நாட்டு அதிபரிடம் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

modi
modi

By

Published : Jun 10, 2020, 6:33 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று உலகையே சூறையாடி வரும் வேளையில், நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரொட்ரிகோ டுடேர்தே உடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைப்பேசி மூலம் உரையாடினார். அப்போது, கோவிட்-19ஐ தடுக்க இரு நாடுகளும் எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

பெருந்தொற்றை எதிர்கொள்ள பிலிப்பைன்சுக்கு இந்தியா மருந்து அனுப்பிவருவதை அதிபர் ரொட்ரிகோ பாராட்டினார். இதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, பிலிப்பைன்சுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை இந்தியா தொடர்ந்து விநியோகிக்கும் என உறுதியளித்தார்.

மேலும், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் அனைத்தும் மனித சமூகத்தின் நன்மைக்குப் பயன்படுத்தப்படும் என அந்த உரையாடலின்போது பிரதமர் மோடி உறுதியளித்தாக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளில் இருநாடுகளுக்கும் இடையேயான நல்லுறவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பகிர்ந்துகொண்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : போராட்டத்தில் காயமடைந்த 75 வயது முதியவரை குறிவைத்து ட்ரம்ப் ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details