கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதேபோல், தாய்லாந்திலும் வைரஸ் பரவலின் தாக்கம் அதிகமுள்ளது. இதுவரை அங்கு 2,966 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவல் காரணமாக 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, நாட்டில் மேற்கொண்ட நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓ சாவிடம் விளக்கியதாக மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இரு நாட்டுக்கும் வரலாற்று, கலாசார ரீதியான தொடர்பு உள்ளது. கரோனா வைரஸ் நோய் ஏற்படுத்தும் சவால்களை இந்தியாவும் தாய்லாந்தும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளும்" என பதிவிட்டுள்ளார்.