சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் இன்று நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சரித்தர நிகழ்வை காண்பதற்காக ஒட்டுமொத்த இந்தியாவே விழிப்புடன் காத்திருந்த நிலையில், சில தொழில்நுட்ப கோளாறுகளால் தரையிறக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சிறுவனின் ஆசையை கேட்டு ஷாக்கான மோடி; என்ன பதில் சொன்னார் தெரியுமா? - bangalore
பெங்களூரு: இஸ்ரோ வளாகத்தில் மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடிக்கொண்டிருந்தபோது, அவரிடம் மாணவர் ஒருவர் வெளிப்படுத்திய ஆசை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை நேரடியாக இஸ்ரோ மையத்தில் இருந்து கவனிப்பதற்காக பிரதமர் மோடி நள்ளிரவு இஸ்ரோ மையத்திற்கு வந்திருந்தார். அப்போது, இஸ்ரோ மையத்தில் இருந்த மாணவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
அந்த சமயத்தில் மோடியின் அருகிலிருந்த மாணவன் ஒருவர், 'நான் குடியரசுத் தலைவர் ஆக வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காக நான் என்ன செய்ய வேண்டும்?’ என அவரிடம் கேள்வி எழுப்பினார். உடனே, வியப்படைந்த மோடி, மாணவரைத் தட்டிக்கொடுத்துக்கொண்டே, 'ஏன் குடியரசுத் தலைவர்? பிரதமர் ஆக வேண்டும் என்ற ஆசை தோன்றவில்லையா?' என சிரித்துக்கொண்டே அந்த மாணவருக்கு ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.