ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தின் இறுதியில் (பிப்ரவரி-மார்ச்) ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தப் பண்டிகை கொண்டாட்டத்தின்போது ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி மகிழ்வார்கள்.
இந்தாண்டு ஹோலி பண்டிகை வருகிற 9, 10ஆம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வது வழக்கம். இந்த நிலையில், இந்தாண்டு கொண்டாட்டத்தில் தான் பங்கேற்கப்போவதில்லை என்று டவிட்டரில் பதிவிட்டுள்ளார்.